ஜார்கண்ட்டில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் 5,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளதாகவும் , 166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஜார்கண்ட் மாநிலத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.