உறுதியான தூக்கு தண்டனை ! குற்றவாளி வினய் சர்மா புதிய கருணை மனு

Published by
Venu

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா  டெல்லி துணை நிலை ஆளுநரிடம் புதிய கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதுஇந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.இறுதியாக குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.இதன் பின்னரும் தூக்கிலிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.இறுதியாக குற்றவாளிகள் 4-பேருக்கும் மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .

இந்நிலையில் குற்றவாளி வினய் சர்மா  டெல்லி துணை நிலை ஆளுநரிடம் புதிய கருணை மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

4 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

6 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

8 hours ago