பஞ்சாப்பில் ராணுவ முகாமில் துப்பாக்கிசூடு – பயங்கரவாத தாக்குதல் இல்லை : பஞ்சாப் காவல்துறை
பஞ்சாப் பதிண்டா இராணுவ முகாமில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதலில்லை என பஞ்சாப் போலீசார் தகவல்
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அதிவிரைவு படை உஷார்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதிதீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை நடந்த சம்பவத்தை எடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் இல்லை
பஞ்சாப் பதிண்டா இராணுவ முகாமில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாத தாக்குதலில்லை என பஞ்சாப் போலீசார் தகவல் அளித்துள்ளனர். ராணுவ முகாமில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக 28 குண்டுகளுடன் இருந்த துப்பாக்கி மாயமான நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், துப்பாக்கி மாயமான சம்பவத்தில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து ராணுவ முகாம் கதவுகள் மூடப்பட்டு தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.