#Attibele
அத்திபெலேவில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் அத்திபெலேயில் உள்ள பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்த ரூ1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த இரு சக்கர வாகனங்கள் பல சேதம் அடைந்தன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு விபத்தில் கடை ஊழியர்கள் பலரும் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…