#BREAKING:பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு 10 ஆக உயர்வு ..!

#Attibele

அத்திபெலேவில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் அத்திபெலேயில் உள்ள பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்த ரூ1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த இரு சக்கர வாகனங்கள் பல சேதம் அடைந்தன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு விபத்தில் கடை ஊழியர்கள் பலரும் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்