திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் நேற்றிரவு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின் பேசிய வட்ட அலுவலர் விர்ஜா சங்கர், மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசு பையில் தீப்பொறி பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த விசாரணையில் போது மீரட்டில் சட்ட விரோதமாக இயங்கிய சில பட்டாசு தயாரிப்பாளர்களையும் கண்டறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…