இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு என சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். கொரோனா பாதித்த 81 பேரில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 81 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கொரோனா வைரஸை உலக முழுவதும் பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…