கேரளா திருவிழாவில் பட்டாசு தீ விபத்து.! 150 படுகாயம்., 8 பேர் கவலைக்கிடம்.? 

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கோயில் திருவிழாவில் பாட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

Kerala Fire Accident

கேரளா : காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் வீரராகவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து, தீயணைப்பு துறையினர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளையும், இந்த வெடி விபத்து ஏற்பட்டது குறித்தும் விசாரணை செய்தும் வருகின்றனர். மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 8 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்ஹாங்காடு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கேரள மாநில உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 33 பேர் காசர்கோடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , 19 பேர் காஞ்சங்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 12 பேர் அரிமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்