ஜெய்ப்பூரில் அருகே எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலை ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது.
இதுகுறித்து ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறியதாவது, பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…