டெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து
டெல்லி ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சண்டிகர் -கொச்சுவேலி ரயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .
டெல்லி ரயில்நிலையத்தில் மதியம் 2 மணிக்கு 8 வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சண்டிகர் -கொச்சுவேலி ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது .தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் நான்கு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை.