ஆந்திர மாநிலம் சித்தூர் என்ற பகுதியில் இயங்கிவரும் காகிதத்தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பாஸ்கர் என்பவருக்குச் சொந்தமான காகிதத்தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு புதன் கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். பாஸ்கர், தில்லி பாபு மற்றும் பாலாஜி ஆகியோரது உடல் அடையாளம் காணப்பட்டது. மேலும் சில தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலிசார் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலிசார், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் முதல் தளத்தில் தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் உரிமையாளர் பாஸ்கர் அதே கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை தனது மகன் டில்லி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இருந்த நிலையில் பாஸ்கர், தில்லி பாபு மற்றும் பாலாஜி ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…