திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!
கவுன்டரில் இருந்த யுபிஎஸ் கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை தேவஸ்தான கவுண்டர் எண் 47ல் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கவுன்டரில் இருந்த யுபிஎஸ் கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
யுபிஎஸ் திடீரென ஷாக் சர்க்யூட்டுடன் வெடித்து தீப்பிடித்ததும், பக்தர்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வழக்கமாக, திருமலை லட்டு கவுண்டர்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருப்பது இயல்பு.
சமீபத்தில், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் பரிதாப சம்பவத்துக்குப் பிறகு, சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், இன்று காலை ஏற்பட்ட இந்த சிறிய தீ சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.