அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..! விளக்கால் நடந்த விபரீதம்..!

Default Image

செகந்திராபாத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் பூஜை அறையில் இருந்த விளக்கு விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் : செகந்திராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற தீ விபத்தில் டெக்கான் மால் முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டிடத்தை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சுமார் 25 லட்சம் செலவில் மிகப் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது தவிர டெக்கான் மால் கட்டிடம் இடிந்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, இழப்பீடும் வழங்கி வருகிறது.

Deccan building demolition
Deccan building demolition [Image Source : Twitter/@TheHansIndiaWeb]

இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செகந்திராபாத், மாரேடுபள்ளியில் உள்ள ஸ்ரீ லீலா ஹில்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் உள்ள வீட்டில் பூஜைக்காக ஏற்றிய விளக்கு சரிந்து அருகில் இருந்த பொருட்களில் பற்றியதில் தீ கட்டிடம் முழுவதிலும் பரவியது. தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்தது.

Secunderabad Fire Break Out 1
Secunderabad Fire Break Out 1 [Image Source : Twitter/@jsuryareddy]

குடிருப்பில் இருந்தவர்கள் உட்பட அப்பகுதி மக்களும் தீயைக் கண்டு பீதியடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்