கொல்கத்தா : வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு துறையினர்!
மேற்கு வங்க மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஊர் கொல்கத்தா. இந்த ஊரில் உள்ள பிரபலமான வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தீ எப்படி வந்தது, பட்டாசு வெடி பொருட்கள் மூலம் ஏற்பட்டதா என சோதித்து வருகின்றனர். வட மாநிலங்களில் தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த வணிக வளாகத்தில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதேனும் விற்கப்பட்டு வந்ததா எனவும் ஆராயபட்டு வருகிறது.