காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மேலும் காற்று மாசுபாட்டு நிலைமையை மோசமடைய செய்துள்ளது .
இன்று அதிகாலை காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் உள்ள கழிவு மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . மலையிலிருந்து தீ புகை எழுந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர் .ஆனால் தீ அப்பகுதியில் மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை .மேலும் விபத்திற்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை .
மேலும் இந்த தீ விபத்து மூலம் கிழக்கு டெல்லி முழுவதும் புகையால் மூழ்கியுள்ளதாகவும் , அப்பகுதியில் உள்ளவர்கள் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனால் டெல்லியின் தற்போதைய காற்று மாசுபாட்டானது மோசமடைந்து மேலும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…