நின்றுகொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து..! தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் உடல் கருகி உயிரிழப்பு..!
பெங்களூரில் நின்றுகொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் லிங்கதீரனஹள்ளியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் உயிரிழந்துள்ளார். லிங்கதீரனஹள்ளியில் உள்ள பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி) பேருந்து நிலையத்தில் சுமனஹள்ளி பஸ் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் பிரகாஷ், பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஓய்வறையில் தூங்கச் சென்றார்.
ஆனால் நடத்துனர் பேருந்தில் தூங்கியுள்ளார். அப்பொழுது திடீரென பேருந்தில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த நடத்துனர் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த நடத்துனர் 45 வயதான முத்தையா சுவாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நடத்துனருக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி தெரிவித்தார்.