தனியார் முதியோர் இல்லத்தில் தீ விபத்து..! 5 பேர் உயிரிழப்பு..!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பேங்க் மோர் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதியோர் இல்லத்தில் இருந்த 2 மருத்துவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். முதியோர் இல்லத்தில் உள்ள ஸ்டோர் அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட குறைந்தது ஐந்து பேர் தீயால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விபத்தில் காயாமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். இறந்தவர்கள் மருத்துவ நிறுவன உரிமையாளர் டாக்டர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா ஹஸ்ரா, உரிமையாளரின் மருமகன் சோகன் கமாரி மற்றும் வீட்டுப் பணிப்பெண் தாரா தேவி என்பவர்கள் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
#WATCH | Jharkhand: Five people, including a doctor and his wife, died in a fire in the residential complex of a hospital in Dhanbad. pic.twitter.com/pVEmV7Z5MW
— ANI (@ANI) January 28, 2023