கேரளாவில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரும் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவரும் இறந்தனர்.
கேரளாவில் உள்ள கண்ணூரில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அருகே சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எறிந்துள்ளது. இதில் காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணும், அவரது கணவரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் மற்றும் அவரது மனைவி ரீஷா என்பவர்கள்.
நிறை மாத கர்ப்பணியாக இருந்த ரிஷாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து ரீஷா அவரது கணவர் மற்றும் அவரது உறவினர் பெண்கள் 3 பேர், ஒரு குழந்தை என அனைவரும் காரில் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் திடீரென காரின் முன் பகுதி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.
வாகனம் தீப்பிடித்ததில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் காரை விட்டு இறங்கினர். ஆனால் தீ பற்றி எரிந்ததில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பிர்ஜித் மற்றும் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவால் காரின் கதவை திறந்து தப்பிக்க இயலவில்லை. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் காரின் முன்புறம் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து விடுமோ என்ற பயத்தில் இருந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்து பிரிஜித் மற்றும் ரீஷாவின் உடல்களை மீட்டனர்.
தம்பதிகளோடு காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்த பின்னர் தான் தீ விபத்துக்கான காரணத்தை அறிய முடியும் என்றும் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…