வென்டிலேட்டர் வசதிகொண்ட படுக்கைக்கு 1 லட்சம் பணம் கேட்டதற்காக மூன்று மருத்துவர்கள் மீது எப்ஐஆர் பதிவு!
பி.சி.எம்.சி நிர்வாகம் நடத்தும் மருத்துவமனையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் படுக்கையை கொடுக்க வேண்டுமானால் ஒரு லட்சம் தரவேண்டும் என பணம் வசூலித்த மூன்று மருத்துவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் யார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சின்ச்வாட் பகுதியில் பிசிஎம்சி நிர்வாகம் நடத்தும் இலவச ஆட்டோ கிளஸ்டர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மீது தற்பொழுது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வென்டிலேட்டர் வசதிகொண்ட படுக்கை வேண்டுமானால் ஒரு லட்சம் கொடுக்க வேண்டுமென பணம் வசூலித்த ஆட்டோ கிளஸ்டர் மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர் மீதும், தனியார் மருத்துவமனையில் உள்ள இரண்டு மருத்துவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற பி.சி.எம்.சி நிர்வாகத்தின் பொதுக்குழு கூட்டத்தில், ஆட்டோ கிளஸ்டர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் வென்டிலேட்டர் படுக்கைகாக ஒரு லட்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இவ்வாறு பணம் வசூலிக்க கூடிய மருத்துவர்கள் மீது தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதாக இந்த புகாரில் பிசிஎம்சி பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று மருத்துவர்கள் மீதும் பிசிஎம்சி நிர்வாகம் தற்பொழுது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.