மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது எப் ஐஆர் பதிவு
முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மற்றும் பலர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிபொருட்களுடன் கார் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
வெடிபொருட்களுடன் காரை நிறுத்தியதாக மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு சேர்ந்த உதவி ஆய்வாளர் சச்சின் வாசியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரே-க்கு 8 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பாக மும்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலித்து உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கி விட்டார் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் வீர் சிங்கின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மற்றும் பலர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.