பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் மீது லாரி மோதிய வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் உன்னா தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார் பெண் ஒருவர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் புகார் அளிக்க சென்றார்.அப்போது அந்த பெண்ணின் தந்தையை காவல்த்துறையினர் கைது செய்தனர்.இதன் பின்னர் அவர் காவலிலே உயிரிழந்தார்.பெண் பாலியல் செய்யப்பட்டது மற்றும் அவரது தந்தை காவலிலே உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பல குரல்கள் எழத்தொடங்கியது.அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதவராக பல போராட்டங்கள் நடைபெற்றது.மேலும் பாஜக எம்எல்ஏ-வை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவ,பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அலஹாபாத் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ-வை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழும்பியது. இதன் பின்னர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். பிறகு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.தற்போதும் இந்த வழக்கின் சிபிஐ விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று ரேபரேலி பகுதியில் அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவினப் பெண்கள் ஆகியோர் காரில் சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற கார் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் கடுமையாக காயமடைந்தனர்.எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மற்றும் உறவினப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.
லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக குல்தீப்சிங் செங்கார் எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது ரேபரேலி காவல்த்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த கார் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இந்த சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…