உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். கொரோனில்(Coronil) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. அந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா 7 நாட்களில் குணமடையும் என பதஞ்சலி கூறியது.
இந்த மருந்தை 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுமையாக குணமடைந்தாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். இதையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கவேண்டும் .
அதைப் பரிசோதனை செய்து ஆய்வில் உண்மையான பின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும். அதுவரை விளம்பரம் செய்யக்கூடாது என கூறி மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியது.
லட்சக்கணக்கானக்கனோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏமாற்றும் வகையிலும் கொரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…