பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுப்பற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.மேலும், ஏப்ரல் 20-க்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 20 -ஆம் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில் ஒன்றாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.