ஆணுறை இல்லாததால் அபராதம் – டெல்லி ஓட்டுநர்கள்..!
புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் நாடு முழுவதும் வாகனம் ஓட்டுபவர்கள் விதியை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
விதி மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் கார் சோதனை போலீசார் செய்து வருகின்றனர்.சோதனையில் முதல் உதவிப் பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் விதிப்பதாக ஓட்டுனர்கள் கூறுகின்றன.
இதுகுறித்து ஓட்டுனர்கள் கூறுகையில்,ஆணுறை பாதுகாப்பான உடலுறவுக்கு பயன்படுகிறது. கார்களில் உள்ள குழாய் திடீரென வெடிப்பு ஏற்பட்டால் அந்த கசிவை நிறுத்துவதற்கு பயன்படுகிறது. ஏதேனும் காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்தவும் பயன்படுகிறது. ஆணுறை பயன்பாடு குறித்து போக்குவரத்து காவல்துறை தெரியவில்லை. இதை பற்றி அவரிடம் கேட்டால் சிரிக்கிறார்கள். ஆனால் அபராதம் மட்டும் வசூலிக்கிறார்கள் என கூறினார்.