நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கு ஆம்ஆத்மி, யோகி வரவேற்பு… ப.சிதம்பரம், மம்தா எதிர்ப்பு….
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்களை நிதி அமைச்சர் அறிவிப்பார் என பாரத பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்த அறிவிப்புகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
எங்கள் மாநிலத்தில் அதிக அளவில் சிறுகுறு தொழில்கள் இருப்பதால் நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், மத்திய அமைச்சர் அறிவித்த அறிவிப்பில், தொழிலாளர்களுக்கான பி.எப் குறித்து நிதி அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும், இந்த அறிவிப்பால் 70லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் அடைவர் என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நிதியமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள தனது கருத்தின் படி, நிதியமைச்சரின் அறிவிப்புக்காக மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் நிதிஅமைச்சரின் அறிவிப்புகளில் ஒன்றும் இல்லை. மாநிலங்களுக்கு எதுவும் இல்லை
இதேபோல், முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழைகளுக்கு எதுவுமில்லை எனவும், தினமும் உழைக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இந்த அறிவிப்பில் இல்லை என்றும், நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்பு ஏமாற்றத்தையே அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.