#Budget Live : ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது அவரது உரையில் ,தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும். ஆண்டுக்கு, ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10% வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 % உள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 % வரி செலுத்தினால் போதும்,ரூ. 10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 % உள்ளது, இனிமேல் அது 20 % குறைக்கப்படும்.
ரூ.12.15 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 % வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 % வரி வசூலிக்கப்படும்.மேலும் ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.