பட்ஜெட் மீதான விவாதம் -நாளை பதில் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர்

நாளை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. வருகின்ற 15-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 2-வது அமர்வும் நடைபெறுகிறது.கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நாளை மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.