BUDGET 2023 LIVE: வருமான வரி வரம்பு உயர்வு; சிகரெட் விலை உயர்வு.!
- MSME ரூ.9000 கோடி: அதிகரித்து வரும் வட்டி விகிதச் சுமையிலிருந்து பாதுகாக்க, சிறுகுறு வணிகர்களுக்கான ரூ.9000 கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மறுசீரமைப்பது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: ஆற்றல் மாற்றத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் வளர்ச்சிக்காக, பேட்டரி சேமிப்புக்கான சாத்தியங்கள், 2030-க்குள் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 45 GW ஆற்றல் சேமிப்புத் திறன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டிஜிலாக்கர்: சிறு குறு வணிகங்கள், பெரிய வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பயன்பாட்டிற்காக ஆன்லைனில் பாதுகாப்பாக ஆவணங்களை சேமித்து வைத்து தேவைப்படும்போது பகிர்வதற்கு டிஜிலாக்கர் நிறுவனம் அமைக்கப்படும்.
- லேப் க்ரோன் டயமண்ட்ஸ்(LGD): இந்த தொழில்நுட்பம் மூலம் இயற்கை வைரங்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் வைரங்களை உருவாக்கலாம். இது தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையாகும். இந்த LGD விதைகள் மற்றும் இயந்திரங்களின்உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
-
பசுமை எரிபொருள்: மாசுபடுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு மாநில அரசுகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம். 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிபொருளுக்கு மாறுவதில் கவனம் செலுத்துவதால், மின்சார வாகனங்கள் உட்பட நாட்டில் ஆட்டோமொபைல்களின் விற்பனைக்கு இது மேலும் அதிக விற்பனையைக் கொடுக்கும்.
இதன்மூலம் அனைத்து பிரிவுகளிலும் மின்சார வாகன தயாரிப்புகளை தயாராக வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் போன்ற நிறுவனங்கள் அதிக பயன் அடையலாம் என கூறப்படுகிறது.
- புதிய வருமான வரிகள் :
- புதிய வரி விதிப்பின் கீழ், 3 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி கிடையாது.
- ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.
- ரூ.6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்.
- ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.
- 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு, இயல்புநிலை(Default) வரி விதியாக இருக்கும், ஆனால் குடிமக்கள் இன்னும் பழைய வரி முறையின் கீழ் பலன்களைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மஹிளா சம்மான் சேமிப்புத் திட்டம்: ஒருமுறை புதிய சிறுசேமிப்புத் திட்டமான ‘மஹிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் மூலம் மகளிர் பெயரில் மார்ச் 2025 வரை 2 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக ரூ. 2 லட்சம் வரை, 7.5% நிலையான விகிதத்தில் பகுதியளவு திரும்பப்பெறுதல் போன்ற திட்டங்களுடன் ஏற்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.
- மற்ற சில முக்கிய அம்சங்கள்:
- வருமான வரி கணக்கை எளிதாக தாக்கல் செய்ய புதிய அப்ளிகேஷன் உருவாக்கப்படும்.
- கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- தங்கம், வைரம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டது.
கேமராக்கள், டிவிக்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு
- வருமான வரி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்வு. ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது, இது ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை வரம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிகரெட் விலை: சிகரெட் விலை 16% வரை உயர்த்தப்படும்.
- 100 புதிய ஆய்வகங்கள்: பொறியியல் நிறுவனங்களில் 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், துல்லியமான விவசாயம், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சுகாதாரம் போன்ற பயன்பாடுகளை உள்ளடக்கிய ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- இளைஞர்களுக்கான DBT திட்டம்: 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு ஆதரவை வழங்க, பான் இந்தியா நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் திட்டத்தின் கீழ் நேரடி பயன் பரிமாற்றம்(DBT) அறிமுகப்படுத்தப்படும்.
- ஆத்மநிர்பர் தூய்மை திட்டம்: தோட்டக்கலைப் பயிர்களுக்கு நோய் இல்லாத, தரமான நடவுப் பொருள் கிடைப்பதை மேம்படுத்த, ஆத்மநிர்பர் தூய்மை ஆலைத் திட்டத்திற்காக ரூ. 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றின் சாகுபடிப் பரப்பை 15 சதவீதத்தில் இருந்து உயர்த்தும்.
- ஆவாஸ் யோஜனா: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான 64% ஒதுக்கீடு மற்றும் ரூ.79,000 கோடியாக அதிகரிப்பது, வணிக வாகனங்கள் மற்றும் டிராக்டர்களுக்கு ஆதரவாக இருக்கும்
- சுற்றுலா தலங்கள்: சுற்றுலாவை மேம்படுத்த போட்டிகளின் அடிப்படையில் 50 சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும்.
- கௌஷல் விகாஸ் யோஜனா 4.0: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 ஐ அரசாங்கம் தொடங்கும்.
- புதிய திறன் இந்தியா மையங்கள்: இந்தியா முழுவதும், 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.
- இணைய கோர்ட் எனும் இ-கோர்ட்டுகளின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விவசாயிகளுக்கு ஆதரவு: அடுத்த 3 ஆண்டுகளில், ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள, 10,000 உயிர் உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்.
- பான் அட்டை: குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும், பான் (PAN) அட்டை இனி பொதுவான அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.
- 2030-க்குள் 5 MMT என்ற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு. இதனை அடைவதற்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு.
- 50 கூடுதல் விமான நிலையங்கள், நீர் ஏரோட்ரோம்கள், விமான இணைப்புக்காக தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்
- இந்திய ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது 2013-14ல் செய்யப்பட்ட செலவீனத்தை விட 9 மடங்கு அதிக செலவாகும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- போக்குவரத்துக்கு ரூ.75,000 கோடி: போக்குவரத்து திட்டங்களுக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66% அதிகரித்து 79,000 கோடி ரூபாயாக உயர்வு.
- தேசிய நூலகம்: நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரமான புத்தகங்களை வழங்குவதற்காக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
- கழிவுநீர் அகற்றும் பணியில் முழுக்க 100% இயந்திரங்களை பயன்படுத்தப்படும்.
- விவசாயிகள், மாநிலம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.2200 கோடி செலவிடப்படும்.
- பழங்குடியின மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் 740 ஏக்லவ்யா மாதிரிப் பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை அரசு நியமிக்கும்.
- சப்கா சாத் சப்கா பிரயாஸ் திட்டம் மூலம் விவசாயம், உணவு பதப்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் திறன் மேம்படுத்த கவனம் செலுத்துகிறது.
- பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்காக ஏகலைவா கல்வித்திட்டம் அமைக்கப்படும்.
- பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நாட்டின் முக்கிய இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் நிறுவப்படும்.
- இந்த பட்ஜெட் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, சாத்தியக்கூறுகள், பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் நிதித்துறையில் அதிக கவனம் செலுத்துகிறது.
- சுற்றுலா துறையில் மேம்பாடுகள் பணி மேற்கொள்ளப்படும்,
- இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மேக்ரோ பொருளாதார சூழ்நிலைகளை வலுப்படுத்துவதற்கான உத்வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
- நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் அம்ரித் காலில் முதல் பட்ஜெட் என தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். உலக நாடுகளில் நமது இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
- ஜி-20 தலைமை இந்தியாவிற்கு மேலும் புது உலக ஒழுங்கை வலுப்படுத்த உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.
மத்திய பட்ஜெட் 2023-24 க்கான உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். 2023-24 க்கான பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கினார்.