48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.! காணொளி வாயிலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.!
இன்று நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார்.
48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள், மாநில முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். இதில் முக்கியமாக பான் மசாலா பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, CO2 சேர்த்து பதப்படுத்தும் பழச்சாறுகளுக்கு 18 சதவீத வரி, பெட்ரோல் – எத்தனால் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.