மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

மத்திய பட்ஜெட் 2025 - 2026 உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவாசித்து வருகிறார்.

Union Budget 2025 2026 - Finance minister Nirmala Sitharaman

டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 – 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா அப்பாராவ்வின் ‘தேசமாண்டே..,’ எனும் பாடலை கூறி, அதன் விளக்கமான ‘நாடு என்பது வெறும் மண் அல்ல, மக்கள்’ என்று மேற்கோள்காட்டி இதுவே பட்ஜெட்டின் சிறப்பு அம்சம் என்றார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிறகு, ” பட்ஜெட்டில் வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகில் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.” என குறிப்பிட்டார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள் : 

  • பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தின் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
  • அசாமில் யூரியா உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்படும்.
  • இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான வர்த்தக மையமாக மாற்றப்படும்.
  • வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பீகாரில் தாமரை உற்பத்தி செய்ய தனி வாரியம் அமைக்கப்படும்.
  • சுகாதாரம் மற்றும் வேளாண்துறையில் AI தொழில்நுட்பம் செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை மையமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • அனைத்து MSMEகளின் முதலீடு மற்றும் வருவாய் வரம்புகள் முறையே 2.5 மற்றும் 2 மடங்கு அதிகரிக்கப்படும்.
  • பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 100 மாவட்டங்களில் தன்யா கிரிஷி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கபப்படும்.
  • புதியதாக தொழில் தொடங்கவுள்ளவர்களுக்கு ரூ.20 கோடி வரையில் கடன் மானியம் வழங்கப்படும்.
  • உணவு டெலிவரி திட்டம் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவரப்படும்.
  • பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு  மேல்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கப்படும்.
  • நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் 40 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
  • 52 சுற்றுலா தலங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
  • மாநிலங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • பீகார் மாநில கூட்டுறவு மற்றும் விவசாய வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.
  • சிறந்த வகை பருத்தி உற்பத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தபால் நிலையங்கள் மூலம் ஊரக உற்பத்தி நிலையங்களை முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்டும்.
  • உதயம் தளத்தில் பதிவு செய்த சிறுகுறு தொழில்நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிரத்யேக கடன் வழங்கப்படும்.
  • காலணி துறையில் 22 லட்சம் பேருக்கு வேலை ஏற்படுத்தி தர நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு அளிக்கப்படும்.
  • லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து செய்யப்படும் .
  • எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு செய்யப்படும்.
  • மானியத்துடனான முத்ரா கடன் மருத்துவத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • 2047-க்குள் 100 ஜிகாவாட் அனு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  • உடான் திட்டம் மூலம் மேலும் 120 இடங்களில் விமான சேவை அதிகரிக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.
  • 2028க்குள் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றம் செய்யப்படும்.
  • வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இனி ரூ.6 லட்சம் வரையிலான வாடகை வருவாயில் TDS வரி பிடித்தம் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்