ரிசர்வ் வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்து வருகிறார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையினை தொடர்ந்து அதானி குழும பங்குகள் வெகுவாக சரிந்தன. அந்த அறிக்கையின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது. இதனை அடுத்து, அதானி குழும விவகாரத்தை பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
பொதுநல மனு : இது தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றாலும், அதில் அதிக அளவு முதலீடு செய்து இருப்பது சிறு முதலீட்டாளர்கள் அவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக நேற்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டனது.
உச்சநீதிமன்ற உத்தரவு : மேலும், இந்திய பங்குச்சந்தையை கண்காணித்து வரும் மத்திய அரசின் செபி அதானி குழும விவகாரம் குறித்தும், செபி வழிமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்தும் திங்கள் கிழமை பதில் கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில், நிதித்துறையினை ஆலோசித்து இந்த பதில் அறிக்கையை கூறலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஆலோசனை : உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இந்த சமயத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உள்ளிட்ட முக்கிய ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் செபி நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பங்குசந்தை விவகாரம் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…