ஆர்பிஐ அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை.!

Default Image

ரிசர்வ் வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்து வருகிறார்.

ஹிண்டன்பர்க் அறிக்கையினை தொடர்ந்து அதானி குழும பங்குகள் வெகுவாக சரிந்தன. அந்த அறிக்கையின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது. இதனை அடுத்து, அதானி குழும விவகாரத்தை பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

பொதுநல மனு : இது தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றாலும், அதில் அதிக அளவு முதலீடு செய்து இருப்பது சிறு முதலீட்டாளர்கள் அவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக நேற்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டனது.

உச்சநீதிமன்ற உத்தரவு : மேலும், இந்திய பங்குச்சந்தையை கண்காணித்து வரும் மத்திய அரசின் செபி அதானி குழும விவகாரம் குறித்தும், செபி வழிமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்தும் திங்கள் கிழமை பதில் கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில், நிதித்துறையினை ஆலோசித்து இந்த பதில் அறிக்கையை கூறலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

ஆலோசனை : உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இந்த சமயத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உள்ளிட்ட முக்கிய ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  செபி நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பங்குசந்தை விவகாரம் குறித்தும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்