உ.பி சட்டப் பேரவைக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு – 54.18% வாக்குகள் பதிவு!

Default Image

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில் மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சட்டப் பேரவைக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதன்படி, வாரணாசி, ஜான்பூர், காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 9 மாவட்டங்களில் 23,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கான ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 54.18% வாக்குகள் பதிவாகியுள்ளது. இறுதி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மேலும், 5 மாநிலங்களின் பதிவான வாக்குகள் மார்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Tamilnadu CM MK Stalin - PMK Leader Anbumani Ramadoss
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone