மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்களுக்கு பங்களாக்களை காலி செய்ய இறுதி அறிவிப்புகள் வெளிட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, அமைச்சர்கள் காலி செய்ய அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு பதிலளிக்கவில்லை மற்றும் கொரோனா தொற்று நோய் அல்லது மாற்று தங்குமிடம் இல்லாதது போன்ற காரணங்களை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இறுதி அறிவிப்புகளை நிறைவேற்ற உள்ள பொறுப்பாளர் போலீசாரை நாட பெற்றுள்ளார். குடியிருப்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் என்பதால் அவர் முதலில் பங்களாக்களை காலியாக வைக்க முயற்சிப்பார், பின்னர் போலீசாரை பயன்படுத்துவார் என இயக்குனர் ஆர் ஆர் போன்ஸ்லே கூறினார்.
மாற்று விடுதி வசம் கிடைத்தவுடன் மந்திரி பங்களாக்களை காலி செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். முன்னாள் சுற்றுலா மந்திரி சுரேந்திர பாகேல் மாற்று தங்குமிடம் வழங்கப்படும் வரை தனது பங்களாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறினார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது (2018 டிசம்பரில்) முன்னாள் அமைச்சர்களை நாங்கள் வெளியேற்றவில்லை,” என்று அவர் கூறினார்.
மத்திய பிரதேசத்தில்,சமீபத்தில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பாஜகவை சார்ந்த சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…