மக்களவை தேர்தல் : இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரளாவில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுனில் குமார் போட்டியிட்டார்.
நடிகை ஜூன் மாலியா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில், பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலை எதிர்த்து 27191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமா மாலினி மதுராவில் 2,93,407வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் முகேஷ் தங்கரை தோற்கடித்தார். இது அவரது மூன்றாவது முறை வெற்றி ஆகும்.
பாடகர், நடிகர் மனோஜ் திவாரி பாஜக சார்பில் வடகிழக்கு டெல்லி மக்களவையில் காங்கிரஸின் கன்ஹையா குமாரை எதிர்த்து 1,38,778 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் இருந்து திவாரி மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…