மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சினிமா பிரபலங்கள்? 

மக்களவை தேர்தல் : இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து

மக்களவை தேர்தல் :இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகைகங்கனா ரனாவத்காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நடிகரும், அரசியல்வாதியுமானசுரேஷ் கோபி, கேரளாவில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுனில் குமார் போட்டியிட்டார்.

நடிகைஜூன் மாலியாதிரிணாமுல் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்ட நிலையில், பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பாலை எதிர்த்து 27191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நடிகையும் பாஜக எம்பியுமானஹேமா மாலினிமதுராவில் 2,93,407வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் முகேஷ் தங்கரை தோற்கடித்தார். இது அவரது மூன்றாவது முறை வெற்றி ஆகும்.

பாடகர், நடிகர்மனோஜ் திவாரிபாஜக சார்பில் வடகிழக்கு டெல்லி மக்களவையில் காங்கிரஸின் கன்ஹையா குமாரை எதிர்த்து 1,38,778 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் இருந்து திவாரி மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.