நாட்டில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மார்ச் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே, 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. கடந்த நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை ஒருபக்கம் உயர்ந்துகொண்டே சென்று தற்போது பேரலுக்கு 111 டாலரை தொட்டுள்ளது. இருப்பினும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றும் 5 மாநில தேர்தல் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 12 முதல் 15 ரூபாய் வரை உயரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அடுத்த வாரம் மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடையும் நிலையில், பெட்ரோல் டீசல் விலை தினசரி தொடர்ந்து உயரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களே உடனடியாக பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்புங்கள். பிரதமர் மோடியின் அரசின் தேர்தல் சலுகைகள் முடிவுக்கு வரப்போகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…