டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 8 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை.வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ,அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்றும் விசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…