ஐசியூவில் மனைவியுடன் சண்டை..! பிறந்த குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீசிய கணவர்!

Default Image

நாக்பூரில் ஐசியூவில் உள்ள மனைவியுடன் சண்டையிட்டு, பிறந்த குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீசிய கணவர் கைது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஐசியூவில் இருந்த தனது மனைவியுடன் சண்டையிட்டு, புதிதாகப் பிறந்த மகனை மருத்துவமனை தரையில் தூக்கி வீசியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமராவதியைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர் 2020-இல் திருமணம் செய்ததிலிருந்து தனது மனைவியை சந்தேக படுகிறார் என்றும் டிசம்பர் 30 அன்று அவர் தனது மகனைப் பெற்ற பிறகு அவரைப் பார்க்க மருத்துவமனை வந்தபோது தகராறு செய்துள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அவர் குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார். இதன்பின் சம்பவம் நடந்த வார்டு 46-இல் 32 வயதுடைய நபர் செவிலியர்கள் மற்றும் பிறரால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர்கள் காவல்துறையை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, கொலை செய்ய முயன்றதற்காகவும், தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காகவும் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்