நாய்களுக்காக நடந்த போராட்டம் ..!
பெங்களூர் நகரில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், இரவு நேரத்தில் வீதிகளில் நடமாட முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை வளர்ப்பதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூர் மகாநகர பாலிகே என்ற அமைப்பு ஒரு வீட்டுக்கு ஒரு நாய்க்கு மேல் வளர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், தங்கள் செல்லப்பிராணிகள் இல்லாமல் தங்களால் வாழ இயலாது என்று நாய்களை வீட்டில் வளர்ப்போர் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.
செல்லப்பிராணிகளுடன் சாலையில் திரண்ட குடியிருப்பு வாசிகள், இந்த விவகாரத்தில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று வலியுறுத்தினர்