பரபரப்பு .! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்.! மேற்கு வங்காளத்தில் 5 ரயில்கள், 15 பஸ்களுக்கு தீ வைப்பு.!

Default Image
  • வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 34 சாலைகளில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 15 பஸ்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
  • கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் நின்று கொண்டு இருந்த 4 ரெயில்களை தீ வைத்து எரித்தனர்.

பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்டமாக இயற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநில மக்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக பல இடங்களில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வருகின்றன. இந்த போராட்டம் தற்போது மேற்கு வங்காளத்திலும் பரவியது.

மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா ஆகிய மாவட்டங்களில் நேற்று போராட்ட வன்முறை நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 34 உள்ளிட்ட சாலைகளில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் 15 பஸ்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். மேலும் கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் நின்று கொண்டு இருந்த 4 ரெயில்களை தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்களை போராட்டக்காரார்கள்  தடுத்து நிறுத்தி  கோஷமிட்டதால் ரெயில்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதைப்போல உலுபேரியா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.தீவிர போராட்டங்களால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

மக்களை அமைதி இருக்குமாறு  முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கவர்னர் மற்றும் ஏராளமான பிரபலங்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை  மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி உறுதியளித்து உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்