மாநில அரசின் அலட்சியத்தால் சேதன் செளகான் இறந்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மற்றோரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செளகானுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேதன் செளகான், உத்தர பிரதேச அரசின் அலட்சியத்தால் தான் இறந்தார் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேதன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தரமில்லாத சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அலட்சியத்தால் மட்டுமே சேதன் சவுகான் இறந்ததால், உத்ரபிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறும், யு.பி. சேதன் சவுகானின் மரண வழக்கில் யு.பியின் கல்வி அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் இயக்குனர் பி.ஜி.ஐ.எம். ஆகியோர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று லக்னோ காவல் ஆணையருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…