வித்தியாசமாக ஆன்லைன் வகுப்பை எடுக்கும் பெண் ஆசிரியர்.!
நம்பமுடியாத அர்ப்பணிப்பு வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்க புனே ஆசிரியரின் புதிய முறை வீடியோ கிளே…
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் புனேவைச் சேர்ந்த முமிதாபி என்ற பெண் ஆசிரியர் தனது வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பை தனது லிங்க்ட்இன் கணக்கில் வீடியோவைப் பகிர்ந்துகொண்டார் . எனக்கு முக்காலி எதுவும் இல்லாததால், எனது வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்காக ஒரு வித்தியசமாக ட்ரிக்கே பயன்படுத்தி உள்ளார்.
அதாவது பச்சை பலகையில் வேதியியலை பாடத்தை கற்பிக்க தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தொலைபேசி ஒரு ‘DIY முக்காலி’ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஹேங்கர் உடன் நீண்ட துணி துண்டுகள் கொண்டு ஒரு நாற்காலியில் பொருத்தப்பட்டு தயாராகி உள்ளது.
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் தனது செல்போனால் சில துணி துண்டுகளின் உதவியுடன் கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடப்பட்ட ஹேங்கருடன் இணைத்து செல்போனை அசைப்பதைத் கட்டுப்படுத்துவத்தற்காக துணி துண்டுகளுடன் ஒரு நாற்காலியில் ஹேங்கரைக் கட்டினார் .
இந்த ஆசிரியர் கூறுகையில் எனது ஒரே நோக்கம், வகுப்பறைச் சூழலை பலகை வேலைகளுடன் உருவாக்குவதே ஆகும், எனவே மாணவர்கள் அதை பலனளிப்பதாகக் கருதுகிறேன் என்று முமிதாபி கூறினார். அந்த வீடியோ இதோ இருக்கிறது நீங்களே பாருங்கள்.