விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ ‘வயோமித்ரா’.! ககன்யான் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் தகவல்..!

Gaganyaan project

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர்.

ககன்யான் திட்டத்தில் மனித பாதுகாப்பு மிக முக்கியமானது. இதை உறுதி செய்வதற்காக, பொறியியல் அமைப்புகள் மற்றும் மனித மைய அமைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. LVM3 – HLVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பெங்களூரில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் வகுப்பறை பயிற்சி, உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் விமான உடை பயிற்சி ஆகியவற்றை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுற்றுப்பாதை தொகுதி தயாரிப்பு முடிந்து, ககன்யான் ஏவுதளத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் 2வது சோதனையில் “வியோமித்ரா” என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அவர், “தொற்றுநோய் காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. இப்போது நாங்கள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முதல் சோதனைப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம். விண்வெளி வீரர்களை அனுப்புவதைப் போல அவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் முக்கியம்” என்று கூறினார்.

மேலும், “இரண்டாவது சோதனையில், பெண் ரோபோவான ‘வயோமித்ரா’-வை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கும். இந்த திட்டம் வெற்றிகாரமாக நடந்தால், நாம் அனைவரையும் தாண்டி முன்னோக்கி செல்லலாம்.” என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் இந்தப் பயணம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து மனித விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் திறன் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்