சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்…!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரும்பாலும் தற்பொழுது அரசு பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முதல் சாதாரண கூலித் தொழில் செய்யக்கூடிய நபர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அரசு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்கள் சில சமயங்களில் இதனால் சிக்கலில் மாட்டி விடுகின்றனர்.
தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து தற்போது காவல்துறை மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி இந்த பெண் கான்ஸ்டபிள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து எச்சரித்துள்ள உயர் அதிகாரிகள் காவல் துறையிடம் கொடுக்கப்பட்டுள்ள துப்பாக்கி உயிர்களை காப்பதற்காக மட்டும் தான் என்பதை மறந்துவிடக் கூடாது என கூறியுள்ளனர்.