சத்தீஸ்கர் துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை..! ஆயுதங்கள் பறிமுதல்..!
சத்தீஸ்கரில் சிறப்பு காவல் படைகளுக்கும், நக்சலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் இருப்பது குறித்து ரகசிய தகவல் வெளிவந்துள்ளது. அதனால், பஸ்தர் டி.ஆர்.ஜி. சிறப்பு காவல்துறை படைக்கும், நக்சல்களுக்கும் இடையே நேற்று காலை 8 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
துப்பாக்கி சண்டை முடிந்த பின்னர், அந்த இடத்தில் பெண் நக்சல் ஒருவர் சீருடையோடு இறந்து கிடந்துள்ளார். மேலும், அந்த இடத்தில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 2 கைதுப்பாக்கிகள் மற்றும் மாவோயிஸ்ட்டு முகாம் பொருட்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நக்சல்களை அருகில் உள்ள இடங்களில் தேடும் பணி துவங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.