மக்களவையில் எங்களை தள்ளிவிட்டனர் பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு..!
மஹாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை திடீர் திருப்பமாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அதிபர் துணை முதலமைச்சராக பதவி பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டவர்களை அங்கு இருந்த பாதுகாவலர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.அதில் கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் எம்.பி ரம்யா ஆகிய இரு பெண் எம்.பிக்களை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இது குறித்து எம்.பி ஜோதிமணி கூறுகையில் , மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து நாங்கள் முழக்கம் எழுப்பினோம்.அப்போது என்னையும் ,சக எம்.பியான ரம்யா அவர்களையும் பிடித்து தள்ளினார் என கூறினார்.இது குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் புகார் கொடுத்தார்.