பாகிஸ்தானியர்களிடம் இருந்து இந்திய தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிகையாளர் !
ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து.பாகிஸ்தான் பல வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் கருப்பு தினமாக கடைப்பிடித்தனர்.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை கூறி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் நாட்டை சார்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது இந்திய தேசிய கொடியை கிழிந்தும் , காலால் மிதித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பார்த்த இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஓடி சென்று கீழே கிடந்த தேசிய கொடியும் , பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கையில் இருந்த தேசிய கொடியையும் பறித்தார்.
#WATCH: Journalist Poonam Joshi covering for ANI the #IndianIndependenceDay celebrations outside Indian High Commission in London,where Pro-Pak & Pro-Khalistan protests were also underway, snatches 2 torn parts of tricolour from Khalistan supporters who had seized it from Indians pic.twitter.com/Go7X2tVZXg
— ANI (@ANI) August 17, 2019
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் பூணம் கூறுகையில் , தேசிய கொடி மிதிக்கப்பட்டதும் நான் போராட்டம் நடைபெறும் இடத்தில் கீழே இருந்த கொடியையும் , பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ஒருவர் கையில் இருந்த கொடியை பறித்தேன்.
இவ்வளவு கேவலமான போராட்டத்தை நான் பார்த்ததில்லை. இந்நிலையில் போராட்ட கூட்டத்திற்குள் புகுந்து இந்திய தேசிய கொடியை காப்பாற்றிய பத்திரிகையாளர் பூணத்தை பலர் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.