கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பெண் சுகாதார ஊழியர் உயிரிழப்பு! இறப்புக்கு என்ன காரணம்!
ஹரியானாவில் குரு கிராமில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்ட நிலையில், அவர் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதற்கு காரணம் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிலரின் உயிரிழப்பு தான். ஆனால் தடுப்பூசிக்கும், உயிரிழப்புக்கும் எந்த தொடர்பு இல்லை என சில அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவில் குரு கிராமில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு ஜனவரி 16- ஆம் தேதி கொரோனா தடுப்புசி வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கூறுகையில் அவரது வீட்டில் அவர் திடீரென இறந்து இருந்ததாகக் கூறியுள்ளனர்.
ஆனால் இந்த தடுப்பூசிக்கும், அவரது உயிரிழப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தலைமை மருத்துவ அதிகாரி வீரேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து அறிந்துகொள்ள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா
குந்தலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 11:30 மணி அளவில் சுகாதார பணியாளர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். தடுப்பூசி பெற்றுக் கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு மார்பு வலி ஏற்பட தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இவர் நிர்மல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .
வியாழக்கிழமை தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் துறைத்தலைவர் உட்பட இரண்டு மூத்த மருத்துவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா
ஜனவரி 18ஆம் தேதியன்று பெல்லாரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 43 வயதான குரூப் டி ஊழியரான நாகராஜ், மாநில சுகாதாரத்துறை நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தடுப்பூசி பெற்றுக் கொண்டபின் இரண்டு நாட்களுக்கு பின் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசம்
ஜனவரி 17ஆம் தேதியன்று உத்திரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 46 வயதான சுகாதார ஊழியர் தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளார். தடுப்பூசி எடுத்துக்கொண்டு ஒரு நாள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு இரவில் தனது வேலைகளை முடித்த பின் உறங்கச் சென்ற அவர் மூச்சு திணறல், மார்பில் சங்கடம், இருமல் போன்ற பிரச்சினை காரணமாக அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.