Categories: இந்தியா

பெங்களூருவில் அரசு பெண் அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை..!

Published by
murugan

கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர் சுப்பிரமணியம்புரா பகுதியில் வசித்து வந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் இன்று காலை 8.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த கொலை நன்கு திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருந்த பிரதிமா இரவு 8 மணிக்கு வீடு திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர். கார் டிரைவர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். சநேற்று இரவு 8 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இடையில் தான் இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற போது பெண் அதிகாரியின் கணவர் வீட்டில் இல்லை. இவர் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இருந்துள்ளார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெண் அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றனர். இந்த கொலையில் சட்டவிரோத சுரங்கத்தொழில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து பெரும் மதிப்பிலான  பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

பிரதிமா கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. பிரதிமாவின் வீட்டுப் பணிப்பெண், அவரது ஓட்டுநர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago